`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்’ – வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு! | The Tamil Nadu government has introduced a WhatsApp number for lodging complaints if a bribe is demanded.

Spread the love

எனவே, புதிய சுற்றறிக்கையின்படி, “லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்’ என்ற வாசகத்தை அனைத்து அலுவலகங்களிலும் கட்டாயமாகத் தெரியப்படுத்த வேண்டும் எனத் துறைத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றறிக்கையுடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அமைய வேண்டிய ‘லஞ்ச ஒழிப்பு முழக்கம்’ மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் வழிமுறைகள் அடங்கிய மாதிரிப் பலகை வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (DVAC) dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 044-22321090, 22321085, 22310989 மற்றும் 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நேரடிப் புகார்கள் அல்லது தபால் மூலமான புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி:

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC), எண். 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை – 600016.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *