மொத்தம் உள்ள 61 கடைகளில், 2026 நிதியாண்டில் நிறுவனம் 51 கடைகளை 5,000 சதுரஅடி பரப்பளவுக்கு அதிகமாக கொண்டுள்ளது. இக்கடைகள் தென்னிந்தியாவின் முக்கிய நகை நுகர்வுச்சந்தைகளில் உள்ள நகரங்கள் மற்றும் பேரூர் அமைப்பில் உள்ள நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் 39 கடைகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன. பெரிய அளவிலான கடைகள் (15,000 சதுரஅடிக்கு மேல்)…. மற்றும் நடுத்தர அளவிலான கடைகள் (5,000 சதுரஅடிக்கு மேல் மற்றும் 15,000 சதுரஅடி அல்லது அதற்கு குறைவாக)…. இவை இரண்டும் அமைக்கும் அதன் உத்தி, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் பரந்த வகைகளை காட்சிப்படுத்த உதவுகிறது; இது நிறுவனத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்வதில் முக்கிய பங்காற்றுவதாக நிறுவனம் நம்புகிறது.
இந்தியாவின் முக்கிய நகை விற்பனை நிறுவனங்களிடையே, ஒரு கடைக்கான செயல்பாட்டு வருவாயில் (Revenue Per store) இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது; 2026, 2025 மற்றும் 2024 ஆகிய நிதியாண்டுகளில் முறையே ₹410.23 கோடி, ₹281.62 கோடி மற்றும் ₹316.76 கோடி வருவாயை (Revenue Per store) இது ஈட்டியுள்ளது (ஆதாரம்: CRISIL அறிக்கை).
கடையின் அமைவிடம், அளவு மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான நடைமுறையை (template) இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது; இது தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமையக்கூடிய புதிய சந்தைகளில் வளர்ச்சியை விரிவுபடுத்த உதவுகிறது.
வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் வகையில் “தன வந்தனம்’ (Dhana Vandhanam) மற்றும் ‘பிளெக்சி-ஒ-பிளெக்சி’ (Flexi-o-Flexi) போன்ற நகை சேமிப்புத் திட்டங்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இத்திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மதிப்பையும் அளிக்கும் வகையிலும், நிறுவனத்தின் பிராண்டோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில், சென்னை திருமுடிவாக்கம் (நிறுவனத்தால் நேரடியாக இயக்கப்படுகிறது) மற்றும் காஞ்சிபுரம் மறைமலை நகர் (முழுவதும் சொந்தமான துணை நிறுவனமான ‘அசிதா ஜூவல்லரி மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட்’ மூலம் இயக்கப்படுகிறது) ஆகிய இடங்களில் இந்நிறுவனம் இரண்டு உற்பத்தி நிலையங்களை இயக்குகிறது; இவற்றின் பரப்பளவு முறையே சுமார் 43,861.96 சதுர அடி மற்றும் 20,000 சதுர அடி ஆகும்.
சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தில் இந்நிறுவனம் டிசம்பர் 2, 2024 முதல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
2024 நிதியாண்டில் ₹16,788.05 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 2026 நிதியாண்டில் ₹25,023.93 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல, 2024 நிதியாண்டில் ₹359.83 கோடியாக இருந்த நிகர லாபம், 2026 நிதியாண்டில் ₹1,009.82 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனந்த் ரதி அட்வைசர்ஸ் லிமிடெட் மற்றும் ஈக்விரஸ் கேப்பிட்டல் லிமிடெட் (முன்னர் ஈக்விரஸ் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட்) ஆகியவை புக்-ரன்னிங் லீட் மேனேஜர்களாகவும், MUFG இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (முன்னர் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்) இந்தச் சலுகையின் பதிவாளர்களாகவும் உள்ளன.