இன்று (செப்டம்பர் 28) முதல் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வங்கிப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
ஆனால், இப்போது இந்த வேலைநிறுத்தம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
முதலில் எதற்காக இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது?
> வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே வேலைநாள்கள் இருக்க வேண்டும்.
அனைத்துச் சனிக்கிழமைகளும் விடுமுறைத் தினமாக அறிவிக்கப்பட வேண்டும்.
> ஒவ்வொருவரின் செயல்திறனுக்கேற்ப அரசாங்கம் தரும் ஊக்கத்தொகைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
காரணம், நிலை IV மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள அதிகாரிகள், தங்களது தனிப்பட்ட பணிச் செயல்திறனின் அடிப்படையில் 365 நாள்கள் வரையிலான அடிப்படைச் சம்பளத்திற்கு இணையான ஊக்கத்தொகையைப் இப்போது பெற முடிகிறது.
ஆனால், பிற பணியாளர்கள் மற்றும் நிலை III வரையிலான அதிகாரிகள் அதிகபட்சமாக 15 நாள்களுக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Dearness Allowance) மட்டுமே பெற முடிகிறது.
இப்படி நியாயமற்றதாக ஊக்கத்தொகைத் திட்டம் இருக்கக்கூடாது.
பேச்சுவார்த்தை மூலம் இந்த ஊக்கத்தொகைக்கான தீர்வை முடிவு செய்ய வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளை முன்னெடுத்தே மூன்று நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.