‘இடத்துக்குச் சொந்தக்காரர்ங்கிற முறையில ரங்கநாதன் மற்றும் அவரது மகன் பெயர்களை மட்டும்தான் குறிப்பிட முடியும்கிறதால் அவங்க மீது புகார் தந்தேன்’ என்கிறார்.
சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கிரி பிரசாத்திடம் பேசினோம்.
”அப்பா வழக்கறிஞர்ங்கிறதால ரங்கநாதனும் அவரது மகனும் அப்பாகிட்ட அந்த இட விவகாரம் தொடர்பா லீகல் ஒபீனியன் கேட்டு வந்திருக்காங்க. அப்படிதான் அப்பாவுக்கு ரங்கநாதனையும் அவரது மகனையும் தெரியும். அப்ப சந்திச்சதோட சரி. பிறகு ஓரிரு முறை போனில் பேசியிருக்காங்க.
ஆனா திடீர்னு அமர்நாத் என் பெயரையும் அப்பா பெயரையும் சேர்த்து இந்த விவகாரம் தொடர்பா பேசிய வீடியோக்கள் வெளி வருது. எதுக்கு எங்க பெயரைச் சேர்த்தாங்கன்னே தெரியலை. அந்த இட விவகாரம் தொடர்பா எந்தவித சிபாரிசோ, தலையீடோ எந்த இடத்துலயும் நாங்க பண்ணலை.
அப்படி இருக்கும் போது எங்க பெயரைப் பயன்படுத்தியது குறித்து சம்பந்தப்பட்ட ரங்கநாதன் அவரது மகன், அமர்நாத் அவரது மேனஜர் ஆகியோருக்கு அப்பா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கார்.
ரங்கநாதன் மற்றும் அவர் மகன் ரெண்டு பேர் மீது எங்க பெயரை தவறாக பயன்படுத்தியதற்காகவும், அமர்நாத் ஆதாரம் இல்லாம பெயரை மீடியாவில் டேமேஜ் செய்ததற்கும் விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கோம்.
இந்த ஒரு விவகாரம் மட்டுமில்ல. இன்னும் சில விஷயங்களும் எங்க காதுகளுக்கு வந்தது.
அதாவது எங்களுக்குத் தொடர்பில்லாத சிலர் எங்களது பெயர்களைப் பயன்படுத்தறதா தெரிய வருது. அவங்க குறித்து தகவல் திரட்டச் சொல்லியிருக்கேன். ஆதாரங்கள் கிடைச்சதும் சம்பந்தப்பட்டவங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்னு இருக்கேன்.
இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் சொல்லிட்டேன். எனக்குத் தெரிய தவெகவைச் சேர்ந்த வேறு யாருமே இதுல இன்வால்வ் ஆகலை. போலீஸ் சுதந்திரமா விசாரிச்சா உண்மையான குற்றவாளிகள் சிக்கிடுவாங்க” என்கிறார்.
’எம்.எல்.ஏ.வின் தந்தை ரங்கநாதனுக்கு ஆதரவாக இருக்கிறார்’ என்கிற அமர்நாத், எம்.எல்.ஏ மீதோ அவரது அப்பா மீதோ எழுத்து பூர்வமாக புகார் தரவில்லை. எம்.எல்.ஏ.வின் தந்தையோ ரங்கநாதன் மீதே சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்கிறார். போலீஸ் நேர்மையாக விசாரித்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வரும்.!