கேரள மாநிலத்தின் மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் “ஆனக்கம்பொயில் – மேப்பாடி’ சுரங்கப்பாதை திட்டப் பணிகள் தற்போது மேனகாட்சி பாலம் அருகே நடைபெற்று வருகின்றன.
மலப்புறம் மற்றும் வயநாடு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தச் சுரங்கப்பாதை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பல தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட உடனே, கல்பற்றாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுரங்கப்பாதைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் இருந்தன. மேலும், அப்பகுதியில் சில வீடுகளும், தங்கும் விடுதிகளும் (Homestays) அமைந்துள்ளன.