நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாத விவகாரத்தில், மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறி இருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டு குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதன் லால், ” இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற மத பாகுபாடு ஒருபோதும் நடந்தது இல்லை. பல மதங்களைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி சாதனைகள் படைத்துள்ளனர்.
வரலாற்றை பார்த்தால் அது எல்லோருக்கும் புரியும். இதை ஒரு சர்ச்சையாக மாற்றுவது உங்கள் விருப்பம்; நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற மதரீதியான பாரபட்சம் இதற்கு முன்பும் நடந்தது இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நடக்காது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb