4. தினமும் பிடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் படிப்படியாகக் குறைத்து வாருங்கள்.
5. சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை (Craving) 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அந்தச் சில நிமிடங்களை ஆழமான மூச்சுப் பயிற்சி அல்லது நடப்பதன் மூலம் கடந்துவிட்டால் ஆசை தணிந்துவிடும்.
6. சிகரெட் பிடிக்கும் ஆசை வரும்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

7. கவனத்தைத் திசைத்திருப்ப கடலை மிட்டாய், உலர் திராட்சை அல்லது சூயிங்கம் போன்றவற்றைச் சாப்பிடுங்கள்.
8. புகை பிடிக்கும் நண்பர்கள், இடங்கள், சிகரெட் வாசனை ஆகியவற்றிலிருந்து தள்ளியே இருங்கள்.
9. எந்தச் சூழலிலும் யார் வற்புறுத்தினாலும் சிகரெட் பிடிப்பதில்லை என்பதை வைராக்கியமாகக் கொள்ளுங்கள்.
10. சிகரெட் பிடிக்கும் உந்துதல் ஏற்படும்போது ஸ்ட்ரெஸ் பால் (Stress ball) பயன்படுத்துவது, கைகளுக்கு வேறு வேலைகள் கொடுப்பது என கவனத்தைச் செலுத்துங்கள்.
மன உறுதியைவிட மிகச் சிறந்த தீர்வு வேறில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பலமுறை முயற்சியில் தோற்றாலும், இந்த முறை நிச்சயம் வெற்றிபெறுவீர்கள் என நம்புங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.