வரைமுறை இல்லாமல் தாக்குவோம்.. எல்லைகளே கிடையாது! டிரம்ப் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்! | Will attack without geographic restrictions Iran warns Us president Trump

Spread the love

International

oi-Mani Singh S

தெஹ்ரான்: முன்பை விட தங்கள் படைகள் வலுவாக இருப்பதாகவும் அமெரிக்கா தாக்கினால் புவியியல் வரைமுறைகள் இல்லாமல் அமெரிக்காவின் ராணுவ தளங்களை தாக்குவோம் என்று டிரம்புக்கு ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானை அணு ஆயுதம் தயாரிப்பதில் இருந்து நான் தடுத்திருக்காவிட்டால் இஸ்ரேலும் மத்திய கிழக்கு பிராந்தியமே இன்று இருந்திருக்காது. ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என டிரம்ப் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் மத்திய கிழக்கு போர் தீவிரம் அடையுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் அந்த நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்து வரும் நிலையில், தேர்தல் முடிந்துள்ளதால் மீண்டும் தாக்குதல் தீவிரம் பெறும் என்று பேசப்படுகிறது.

Will attack without geographic restrictions Iran warns Us president Trump

இந்த சூழலில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய போது நாங்கள் இருந்ததை விட தற்போது வலிமையாக உள்ளோம். அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், எந்த எல்லைகளும் இன்றி அமெரிக்காவின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம்.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உத்தரவுப்படி நாங்கள் செயல்படுகிறோம். அமெரிக்கா தாக்குதலை மீண்டும் தொடங்கினால், பிராந்தியத்திற்கு வெளியே உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை கூட தாக்குவோம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நேரடி தாக்குதல் நடத்தியதில் ஈரான் படைகளுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.

எனவே போரின் துவக்கத்தில் இருந்ததை விட தற்போது பலமாக உள்ளோம். ஈரான் படைகளுக்கு தற்போது சிறந்த ஊக்கமும், தன்னம்பிக்கையும் கிடைத்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் உத்தரவின் கீழ், தாக்குதலுக்கு பதிலடியானது உடனடியாகவும் திறன் மிக்கதாகவும், புவியியல் எல்லைகளை கடந்ததாகவும் இருக்கும். நாங்கள் விதித்த 7 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்” என்றார்.

ஈரானுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அண்மையில் ஈரான் மீது மற்றொரு நடவடிக்கைக்கு முழு வீச்சில் தயாராக இருப்பதாக மிரட்டியிருந்தார். டிரம்ப் கூறுகையில், ராணுவத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக ஆயுதங்களைத் தயாரித்து வருகிறோம். ஈரான் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம், தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

முடிந்தவரை அந்த நாட்டின் எஞ்சிய பகுதிகளை அழிக்க நான் விரும்பவில்லை; ஆனால், ஒருவேளை அவ்வாறு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்” என்று கூறியிருந்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் வார்த்தை மோதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையேயான யுத்தம் மீண்டும் தீவிரம் பெறுமோ என்ற கவலையை உலக நாடுகள் இடையே ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *