International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பலை அட்டாக் செய்தாக ஈரான் மீது பழி சொல்லி, அந்நாட்டின் மீது சரமாரியான தாக்குதலை அமெரிக்கா நடத்தியிருந்தது. ஆனால், நாங்கள் அப்படி எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறி.. அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்காவின் தேவையில்லாத தாக்குதலை பார்க்கும்போது.. வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இந்த நிலைகளை குறி வைத்துதான் தற்போது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதை பார்க்கும்போது, அடுத்த ஒரு வருஷத்துக்கு நிச்சயம் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்பது மட்டும் உறுதி.