வானத்திலிருந்து பொழிந்த குண்டு மழை! கொகைன் மாஃபியா கும்பலை பிடிக்க.. அதிரடி வேட்டை! | Mexico Military Launches Major Operation to Capture Drug Gang, Helicopter Unleashes Gunfire in Viral Video

Spread the love

International

oi-Halley Karthik

மெக்சிகோ: மெக்சிகோவில் கொகைன், ஹெராயின் போதைப்பொருள் கும்பலை பிடிக்க.. அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின்போது ஹெலிகாப்டரிலிருந்து குண்டு மழை பொழிந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.

அமெரிக்காவுக்கு பக்கத்தில் இருக்கும் நாடுதான் மெக்சிகோ. இங்கு அதிக அளவில் கொகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அது சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், இதற்கு எதிராக மெக்சிகோ உறுதியான நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த வலியுறுத்தலின் பேரில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Mexico

மெக்சிகோ ராணுவமும், தேசிய காவல் படை, சிறப்பு படைகள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை ஆகியவை இணைந்து நவம்பர் 20ஆம் தேதி அன்று சினலோவா மாகாணத்தின் குவாசேவ் நகரில் அதிரடி சோதனை நடத்தின. இதில் 44 வயதான ‘மெசா ஃபிளோரஸ்’, அவரது கூட்டாளியும் இரண்டாம் நிலை தலைவருமான ஜெர்மன் என்கிற ‘செராபின்’ மற்றும் நிதி விவகாரங்களை கண்காணித்து வந்த ‘ஜோஸ்’ ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்த போது, அவர்கள் துப்பாக்கிகளாலும், வெடிகுண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக மெக்சிகோ ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து, கடத்தல் கும்பலை நோக்கி தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தின. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது.. வானத்திலிருந்து குண்டு மழை நெருப்புகளாக பொழிவதை போன்று இருக்கிறது. இப்படியாக தீவிர முயற்சிக்கு பிறகு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இருப்பினும் இந்த நடவடிக்கையில், 11 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது தலைவன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய பதில் தாக்குதல்களால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. முக்கிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்திய கடத்தல் கும்பல், சாலைகளை மறித்து போக்குவரத்தை முடக்கியது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட மெசா ஃபிளோரஸ் என்பவர் சாதாரண ஆள் கிடையாது. ஆரம்பத்தில் பெல்ட்ரான் லெய்வா கும்பலில் இருந்த இவர், 2013 ஆம் ஆண்டில் தனி அமைப்பை உருவாக்கினார். 2005 முதல் 2019 வரை அமெரிக்காவுக்குள் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தியாக இவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 2025 ஆம் ஆண்டில் எப்பிஐ-ன் மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட இவரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மெக்சிகோ நாட்டு படைகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *