`வாய்திறக்காமல் இருங்க’ – விளாசிய திமுக; கொந்தளித்த திருமா டு வசூலில் இறங்கிய தவெக MLA | கழுகார் | kazhugar updates on TVK, VCK and DMK politics

Spread the love

தென்மாவட்டத்திலுள்ள ‘திரு’ தொகுதியின் எம்.எல்.ஏ சொற்ப வாக்கில் வெற்றிபெற்றார். ‘தி.மு.க மாஜியை தோற்கடித்திருக்கிறோம். அமைச்சர் பதவி நமக்கு வந்து சேரும்’ என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அதே மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவ பிரமுகருக்கு அமைச்சர் பதவி சென்றுவிட்டது.

அதனை சகித்துக்கொள்ள முடியாத எம்.எல்.ஏ., ‘மாண்புமிகு பொறுப்பையும் கொடுத்ததோடு வளமான துறையையும் கொடுத்திருக்கிறீர்கள். அவர் இரண்டு மூன்று கார்களில் வந்து செல்கிறார். இவற்றையெல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா..!’ என்று கட்சித் தலைமையிடம் மன்றாடியிருக்கிறார். மாண்புமிகுக்கள் மாற்றத்தில், தனக்கு லக் இல்லையென ஸ்மெல் செய்த எம்.எல்.ஏ., ‘நான் விரைவிலேயே மாண்புமிகு ஆகிவிடுவேன். அறிவிப்பு வரப்போகிறது.. இனி என்னை வந்து பாருங்கள்’ எனக் கூறி லோக்கல் புள்ளிகள் சிலரிடம் இனிப்புகளை கலெக்ட் செய்ய தொடங்கிவிட்டாராம்.

அவரைப் போலவே, ‘எம்.எல்.ஏ பதவியைப் பறிக்கவா முடியும்?’ என்ற தைரியத்தில் துணிந்து லட்டுகளை அள்ளிவருவதோடு ஏகப்பட்ட அட்ராசிட்டிக்களிலும் ஈடுபட்டுவருகிறார்களாம் பல எம்.எல்.ஏ-க்கள். ‘கடிவாளம் போட வேண்டியது தலைமையின் பொறுப்பு…’ என்கிறார்கள் த.வெ.க சீனியர்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *