மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். 2 பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். சிலருக்கு புதிய பணிவாய்ப்பு கைகூடும். தேடி வருவதைத் தவிர்க்க வேண்டாம். இல்லத்தில் உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டு. எவரிடமும் தர்க்கம் தவிருங்கள். வரவை சேமிக்கப் பழகுங்கள். வாழ்க்கைத்துணை உடல்நலம் சீராகும். செய்யும் தொழிலில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர்க்கு தொடர்ச்சி யாக வாய்ப்புகள் வரும். பயணத்தில் வேகம் வேண்டாம். அஜீரணம், தூக்கமின்மை, அடிவயிறு உபாதை + கள் வரலாம். வேலவன் வழிபாடு, வெளிச்சம் தரும்.
ரிஷபம்
சந்தோஷம் அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பணிகளில் முழுக்கவனம் இருந்தால் முன்னேற்றம் முழுமையாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். குடும்ப ரகசியங்களைப் பொதுவெளியில் பேசவேண்டாம். வாரிசுகளுடன் வீண் தர்க்கம் தவிருங்கள். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் பெரும் முதலீடு வேண்டாம். அரசு, அரசியலில் ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினர் அயல்நாடு செல்லும் யோகம் உண்டு. பயணத்தில் நிதானம் முக்கியம். ஒற்றைத் தலைவலி, பற்கள், எலும்பு உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு, வாழ்வை சிறக்கச் செய்யும்.
மிதுனம்
உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். இடமாற்றம் சிலருக்கு வரலாம். தவிர்க்க வேண்டாம். வீட்டில் விசேஷங்களுக்கு வாய்ப்பு உண்டு. தம்பதியரிடையே இருந்த சுணக்கங்கள் நீங்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகரியங்கள் கைகூடிவரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். அரசியல், அரசுத் துறையினருக்குப் பாராட்டுகள் கிட்டும். கலைஞர்கள், படைப்பாளிகள் வாய்ப்புகளை சின்சியராகச் செய்வது நல்லது. வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். அடிவயிறு, முதுகு, பாதம் உபாதைகள் வரலாம். மீனாட்சியம்மன் வழிபாடு, வாழ்வை மிளிரச் செய்யும்.
கடகம்
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் உயர்வுக்கு உத்தரவாதம் உண்டு. பொறுப்புகளில் நேரம் தவறாமை முக்கியம். கையெழுத்திடுகையில் கவனம் அவசியம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வரவு சீராகும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோர் பொது இடங்களில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் திறமை வெளிப்பட்டு பெருமை கிட்டும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். கழுத்து, முதுகு, தலைவலி உபாதைகள் வரலாம். அரங்கன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
சிம்மம்
பொறுப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த மேன்மைகள்
கைகூடும். பொறுப்புகளை நேரடியாகக் கவனியுங்கள். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. புதிய நபர்களிடம் கவனமாகப் பழகுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். அது துவண்டுவிடாமலிருக்க, தளரா உழைப்பு முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்க வேண்டாம். கலைஞர்கள், படைப்பாளர் களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். தொலைதூரப் பயணத்தை திட்டமிட்டுத் தொடங்குங்கள். நரம்பு, அலர்ஜி உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, அல்லல் தீர்க்கும்.
கன்னி
செல்வாக்கு அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். அதேசமயம், பொறுப்புகளும் அதிகரிக்கும். சோம்பல் தவிர்த்தால், சுலபமாக முன்னேறலாம். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். சுபநிகழ்வுகள் கைகூட, தம்பதியரிடையே | மனம்விட்டுப் பேசுங்கள். செலவுகளில் ஆடம்பரம் வேண்டாம். செய்யும் தொழிலில் தடை நீங்கி வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியலில் உள்ளோருக்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறலாம். வாகனப்பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். அடிவயிறு, முதுகுத்தண்டுவட உபாதைகள் வரலாம். இஷ்ட மகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
துலாம்
சிந்தித்துச் செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உடனிருப்போர் ஆதரவு கிட்டும். அதேசமயம் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். | குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். பெரியோர் வார்த்தைகளை மதியுங்கள். பூர்வீக சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு மேலிடத்தின் ஆதரவு கிட்டும். முகஸ்துதி நபர்களை விலக்குங்கள். கலைஞர்கள், சின்சியராக உழைத்தால் திறமை வெளிப்படும். தொலைதூரப் பயணத்துக்கு முன் போதுமான ஓய்வு முக்கியம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். விநாயகர் வழிபாடு, விடியல் தரும்.
விருச்சிகம்
மன ஒருமையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு ஏற்ப பெருமைகள் சேரும். கோப்புகளை ஒருமுறைக்கு இருமுறை படித்துக் கையெழுத்திடவும். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். உங்கள் வார்த்தைகளில் நிதானம் தேவை. பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். உணவை முறைப்படுத்துங்கள். செய்யும் தொழிலில் லாபம் நிலைக்கும். அரசு, அரசியலில் உள்ளோர் கூடா நட்பை உடனே உதறுங்கள். கலை, படைப்புத் துறையினருக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வேகம் வேண்டாம். அலர்ஜி, வயிறு உபாதை வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.
தனுசு
அதிகரிக்கும் காலகட்டம். பணி சோம்பலைத் தவிர்த்தால், நல்லவை யிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். யாருடைய தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். நல்லவை தொடர, விட்டுக் கொடுத்தல் முக்கியம். வீடு, வாகனம் புதுப்பிக்க யோகம் உண்டு. செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி உண்டு. அரசு, அரசியல் துறையினர்க்கு எதிர்பாரா பாராட்டு கிட்டலாம். கலைஞர்கள், படைப்பாளிகள் உழைப்புக்குப் பலன் கிட்டும். இரவுப் பயணம் தவிருங்கள். தோள்பட்டை, கழுத்து உபாதை வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
மகரம்
எதிர்பார்ப்புகள் படிப்படியாக ஈடேறக் கூடிய காலகட்டம். வீண் ரோஷம், தவிர்த்தால் நல்லவை தொடரும். பணி யிடத்தில் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தம்பதியரிடையே மனம்விட்டுப் பேசுவது நல்லது. பணத்தைக் கையாள்வதில் கவனமாக இருங்கள். செலவுகளில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். அரசியல், அரசுத் துறையினருக்கு உயர்வுகள் வரும். கலை, படைப்புத் துறையினர் பொறுப்புடன் செயல்படுங்கள். வாகனத்தில் அவசரம் கூடாது. கழிவுறுப்பு, கண் உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு துளிர்க்கச் செய்யும்.
கும்பம்
சுணக்கங்கள் நீங்கி சுமுகப் போக்கு நிலவும் காலகட்டம். திட்டமிட்டு உழைத்தால், பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போரிடம் தர்க்கம் தவிருங்கள். குடும்பத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகளிலும் ஒப்பந்தங்களிலும் அலட்சியம் கூடாது. அரசியல், அரசுத் துறையினர்க்கு ஆதரவு தொடரும். கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். இருமல், சளித் தொல்லைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, வாழ்வை இனிமையாக்கும்.
மீனம்
சிந்தித்துச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்ப்புகள் தாமதமாகலாம். அதேசமயம், தேவையற்ற ரோஷம் தவிருங்கள். உடனிருப்போர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். இல்லத்தில் விடியல் வெளிச்சம் பரவும். எதிர்பாராத யோகத்தால் பொருட்கள் சேரும். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். செய்யும் வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. அரசு, அரசியல் சார்ந்தோர் வார்த்தைகளில் நிதானம் தேவை. கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிகளால் முன்னேறலாம். பயணத்தில் இடைவழியில் இறங்கவேண்டாம். கீழ்முதுகு, இடுப்பு, பாதம் உபாதைகள் வரலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

