“வாழ்க்கையில ஒரு கோடி ரூபாய் சேர்க்கணும்!” – ஓர் இந்தியனின் கனவு! சாதிப்பது எப்படி?

Spread the love

“ஒரு கோடி சேர்க்கணும்!’

35 வயதைத் தாண்டிய ஒவ்வொரு சராசரி இந்தியனின் மனதிலும் ஓடும் கனவு இது. ₹1 கோடி என்பது வெறும் எண்களோ, பணமோ மட்டுமல்ல… அது நம் உழைப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரம்! “இனி நமக்கு ஒரு கவலையுமில்லை, ஒரு நல்ல சேவிங்ஸ் இருக்கு” என்கிற மிகப்பெரிய மன அமைதி.

ஆனால், இந்தக் கனவை நிஜமாக்க ஆசையோடு ஆன்லைனில் ஒரு SIP Calculator-ஐ திறந்து பார்த்தால்… அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும்!

ரியாலிட்டி செக்: ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்… இது சாத்தியமா?

35 வயதில் தொடங்குபவர், 45 வயதிற்குள் (அதாவது அடுத்த 10 ஆண்டுகளில்) ₹1 கோடியைச் சேர்க்க வேண்டுமென்றால், ஆண்டிற்கு 12% தோராய வருமானக் கணக்கில்… மாதம் ₹45,000 SIP செய்ய வேண்டும்!

கல்குலேட்டரில் இந்த ₹45,000-ஐப் பார்த்ததும் பலருக்கும் தூக்கமே போய்விடும்.

“ஹோம் லோன் EMI, பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ், அப்பா-அம்மா மருத்துவச் செலவுன்னு மாசம் ஓடுறதே பெரிய விஷயமா இருக்கு… இதுல மாசம் ₹45,000 நான் எங்கே போவேன்? போச்சு… நாம லேட்டா யோசிக்கத் தொடங்கிட்டோம். ₹1 கோடியெல்லாம் நமக்குச் செட் ஆகாது!” என நினைத்து, முதலீடு செய்வதையே கைவிட்டுவிடுவார்கள்.

ஆனால், உண்மையிலேயே 10 ஆண்டுகளில் ₹1 கோடி சேர்ப்பது அவ்வளவு கஷ்டமா?

இன்றைய வருமானத்தைக் வைத்து 10 வருடக் கணக்கைப் போடாதீர்கள்!

இங்குதான் பலரும் ஒரு பெரிய தவறு செய்கிறார்கள். உங்கள் 35 வயதில் இருக்கும் அதே சம்பளம்தான் 40 வயதிலும் இருக்குமா? கண்டிப்பாக உயரும்தானே? அப்புறம் ஏன் உங்க SIP மட்டும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்?

ஓர் உதாரணம் பார்ப்போம்:

நீங்கள் மாதம் ₹25,000 SIP செய்ய முடிகிறது என்று வைப்போம். 12% வருமானத்தில், 10 ஆண்டுகளுக்கு அதே ₹25,000-ஐத் தொடர்ந்து முதலீடு செய்தால், உங்களுக்குக் கிடைக்கும் தொகை சுமார் ₹55 லட்சம்.

“அடடா… இலக்கில் பாதிதானே வருது! அப்போ நான் இன்னும் அதிக ரிஸ்க் எடுத்து வேற எதிலாவது முதலீடு பண்ணணுமா?” என அவசரப்படாதீர்கள்!

ரிஸ்கை கூட்டுவதற்குப் பதிலாக, உங்கள் முதலீட்டுத் தொகையை உயர்த்துங்கள் (Step-up SIP).

அதே ₹25,000 SIP-ஐ, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சம்பளம் உயரும்போது வெறும் 15% Step-up செய்து பாருங்கள்…

10-வது ஆண்டின் முடிவில் உங்கள் கைக்கு வரும் தொகை சுமார் ₹99 லட்சம் (கிட்டத்தட்ட ₹1 கோடி!)

பார்த்தீர்களா? ₹1 கோடி சேர்ப்பதற்கு எந்த அதிசயமும் தேவையில்லை; வளரும் வருமானத்தோடு உங்கள் முதலீட்டை உயர்த்தும் ஒரு சிறிய நிதிப் பழக்கம் மட்டுமே போதும்

உங்களுக்கான 3 ‘முதலீட்டு நெம்புகோல்கள்’ (Levers):

ஒருவேளை உங்களால் 15% உயர்த்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, இலக்கை கைவிட்டு ஓடாதீர்கள். உங்களின் ₹1 கோடி இலக்கை அடைய 3 வழிகள் உள்ளன:

  1. முதலீட்டுத் தொகை (Amount): உங்களால் முடிந்த அளவு அதிகப்படுத்துங்கள்.

  2. கால அவகாசம் (Time): 10 ஆண்டுகள் என்பதை 12 அல்லது 15 ஆண்டுகளாக மாற்றுங்கள்.

  3. முதலீட்டு வளர்ச்சி (Step-up): ஆண்டுதோறும் SIP தொகையை உயர்த்துங்கள்.

சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey 2025–26) படி, இந்தியாவில் மாதந்தோறும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குள் வரும் SIP தொகை ₹28,000 கோடியைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மக்கள் பணத்தைச் சேமிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், செபி (SEBI) 2025 ஆய்வின்படி, சரியான இலக்கு இல்லாமல் முதலீடு செய்வதே பலரின் குழப்பத்திற்குக் காரணம்.

“பெர்ஃபெக்ட்” ஆன ஒரு தொகையைத் தேடி முதலீட்டைத் தள்ளிப்போடாதீர்கள். இன்றே ஒரு தொகையைத் தீர்மானியுங்கள். காலக்கெடுவை நிர்ணியுங்கள். வருமானம் வளர வளர SIP-ஐ உயர்த்துங்கள்.

Labham Workshop on Aug 30 2026

Labham Workshop on Aug 30 2026

10 ஆண்டுகள் கழித்துப் பின்னாடி திரும்பிப் பார்க்கும்போது, “அன்னைக்கு நான் தொடங்குன அந்தச் சிறிய SIP தான் இன்னைக்கு என்னைக் கோடீஸ்வரன் ஆக்கியிருக்கு” என்று பெருமையோடு சொல்வீர்கள்!

உங்கள் முதல் ₹1 கோடியைச் சேர்க்க நேரலை வழிகாட்டல்!

  • நிகழ்ச்சி: உங்கள் முதல் ₹1 கோடி’யை சேர்ப்பது எப்படி? – 35+ வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலீட்டு வழிகாட்டல் நிகழ்ச்சி

  • சிறப்பம்சம்: SIP + SWP வியூகம் | 2-வது வருமானம் பெறும் உத்திகள் | 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக்கும் நிதி பழக்கங்கள்

  • நாள்: ஆகஸ்ட் 30, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

  • நேரம்: காலை 11:00 – மதியம் 12:30 மணி (IST)

  • பேச்சாளர்: டீம் லாபம்

இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்: https://labham.money/events/webinar-aug30-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_aug30_2026

(பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். மேலே உள்ள கணக்கீடுகள் 12% தோராய வருமானத்தின் அடிப்படையில் அமைந்த எடுத்துக்காட்டுகள் மட்டுமே.)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *