விகடன் டெலிவிஸ்டாஸின் “லிங்கம்’ வெப்சீரிஸ் வருகிற ஜூன் 26-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்த வெப்சீரிஸை லக்ஷ்மி சரவணகுமார் எழுதி, இயக்கி இருக்கிறார். ஹீரோவாக கதிரும், ஹீரோயினாக திவ்ய பாரதியும், பூர்ணிமா ரவியும் நடித்திருக்கிறார்கள்.
போலீஸ் ஆசையுடன் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி ரௌடிசப் பாதை பக்கம் திரும்புகிறது என்பது தான் வெப்சீரிஸின் கதைக்களம்.
இதில் கபடி விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது.
‘போலீஸ் ஆகணும்ங்கிறது சின்ன வயசுல இருந்து மனசுல கிடக்கற ஆசை’ என்று தொடங்கும் டிரையலரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்க.