இந்தக் காட்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, விசிக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்து, தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால், தற்போது தவெகவிற்கு 120 சீட்டுகள் கிடைத்துள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் முன்னரே சொல்லியிருந்ததுப் போல, நாளை ஆதரவு கடிதம் வழங்குகிறார் என்றும், இன்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தகவலில் தற்போது குழப்பம் நீடிக்கிறது.
விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, “ஆட்சியிலும் பங்கு
அதிகாரத்திலும் பங்கு
இது திருமா காலம்-இனி
உயர்வோம் மேலும் மேலும்!” என்று பதிவிட்டுள்ளார்.