விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே சில தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், விஜயபாஸ்கரின் ராஜினாமாவால் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகியுள்ளன.

முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியை தொடர்ந்து மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், தாராபுரம் தற்போது விராலிமலை உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த ஒரு சில மாதங்களில் இந்த எண்ணிக்கையிலான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான பலப்பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விஜயபாஸ்கரின் விலகல் அதிமுகவின் சட்டப்பேரவை பலத்தை மேலும் குறைத்துள்ளதுடன் கட்சிக்குள் நிலவும் அரசியல் சூழல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.