அவர், “எஸ்.ஏ.சி சாரின் படங்களுக்கு நான் இசையமைத்தபோது விஜய் அடிக்கடி ரெக்கார்டிங்கிற்கு வருவார். அப்போதிருந்தே அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் ஹீரோ ஆனதுக்கு அப்புறம் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும்போது, அவரைப் பாட வைத்தேன். அவரையும் அவரின் அம்மா ஷோபாவையும் சேர்த்து டூயட் பாடல்களையும் பாட வைத்திருக்கிறேன்.
அதேமாதிரி அஜித்துக்கும் ‘ஆசை’ படத்தில் ஆரம்பித்து ‘ரெட்’ படம் வரைக்கும் பல படங்கள் பண்ணியிருக்கேன். விஜய்யைப் பாட வைத்த மாதிரி அஜித்தையும் பாட வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதுக்குப் பிடி கொடுக்கவே இல்லை” எனப் பகிர்ந்திருக்கிறார்.