விஜய் பதவியேற்றப் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஜெய், “விஜய் அண்ணா தனது நன்றிக்கடனைச் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்.
இன்று நான் திரையுலகில் இந்த நிலையில் இருப்பதற்கு விஜய் அண்ணன் தான் மிக முக்கிய காரணம். அவர் எனக்கு வழங்கிய அந்த முதல் வாய்ப்பினால் தான் இன்று நான் சினிமாவில் இருக்கிறேன். அந்த நன்றிக்கடனைத் தான் நானும் இப்போது செலுத்திக்கொண்டிருக்கிறேன்.
இந்த வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன். இந்த வெற்றி குறித்த பெரும் நம்பிக்கை எனக்குள் முன்பே இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்குமோ, அதற்கு ஏற்றாற்போல் இந்த ஆட்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள். விஜய் அண்ணா எப்போதுமே சொன்னதைச் செய்வார்.
எனவே, அவர் அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார். தமிழ்நாடு இனி நல்ல பாதையில் செல்லும், வெற்றி நிச்சயம்