விமானி கத்திக்குத்து: விமானத்தை காப்பாற்றிய பயணிகள் யார்?|Pilot Stabbed, Plane Tilts: Passengers Turned Into Heroes

Spread the love

கத்திக்குத்தப்பட்ட விமானி காக்பிட்டின் கதவு அருகேயே விழுந்திருந்ததால், அதைத் திறக்கச் சிரமமாக இருந்தது.

காக்பிட் கதவைக் காயம்பட்ட விமானிதான் திறந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

காக்பிட்டிற்குள் நுழைந்ததும், தாக்குதலுக்குக் காரணமான விமானி இருக்கைகளுக்கும் இடையே இருந்த கட்டுப்பாட்டுக் கருவிகளின் மீது அமர்ந்திருந்து, இயக்கக் கருவிகளைச் சேதப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

உடனே, அவரின் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்தேன். அடுத்த சில நொடிகளிலே, விமானம் தலைகீழாகச் சாய்ந்துகொண்டிருந்தது.

நான் ‘ஏர் க்ராஷ் இன்வெஸ்டிகேஷன்’ நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். அதனால், விமானத்தை நிலைக்குக் கொண்டுவர விமானத்தின் கட்டுப்பாட்டு யோக்கை இழுத்தேன்.

நெதன்யாகு - யானிவ் ஹாயூன்

நெதன்யாகு – யானிவ் ஹாயூன்

அதன்பின், பயணிகளில் இருந்த விமானி ஒருவர் வந்து விமானத்தை இயக்குவதைப் பார்த்துக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.

யானிவ் ஹாயூன் பேசும்போது இரு விமானிகள் என்று கூறியிருக்கிறார். இந்த இருவர் குறித்து இஸ்ரேலின் ‘ஜெருசலேம் போஸ்ட்’ கூறியுள்ளதாவது…

“குவைத் வான்வெளியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படும். அப்போது ஃபிளைட் டைம் கூடுதலாக ஓரிரு மணிநேரம் ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *