“வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்”- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | “Land survey number must included in encumbrance certificate” – High Court orders

Spread the love

அதன்படி, பதிவுதுறை சட்டம் பதிவு விதியின் படி சொத்து பதிவுகளுக்கு அசல் ஆவணம் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இந்தச் சட்டம் தொடர்பாக சார் பதிவாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டி இல்லாத காரணத்தால், அசல் ஆவணங்கள் இல்லாதபோது ஆவணப் பதிவுகளைச் செய்ய அவர்கள் தயக்கம் காட்டி மறுக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, போலி பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் 1908-ஆம் ஆண்டு பதிவு சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட,  34-சி பிரிவு தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பத்திரப்பதிவு

பத்திரப்பதிவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில், “தமிழ்நாடு பதிவுச் சட்டத்திருத்தத்தின் பிரிவு 34-சி, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட விதி 55-ஏ-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.

சட்டமன்றம் நீதிசார்ந்த அதிகாரங்களை நிர்வாகத்துறையிடம் வழங்க முடியாது. இத்தகைய செயல்பாடு அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதோடு அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவையும் மீறுவதாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *