விவாகரத்து: ஜூன் 15-ம் தேதி விஜய் – சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்! – நீதிமன்றம் உத்தரவு | Actor Vijay and Sangeetha must appear in person on June 15 the court has ordered.

Spread the love

1999 ஆம் ஆண்டு விஜய் – சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று (ஏப்ரல்.20) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விஜய் - சங்கீதா!

விஜய் – சங்கீதா!

இன்று விஜய் சென்னையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதால் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் விவாகரத்து வழக்கில் ஜூன் 15 ஆம் தேதி விஜய் – சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் விஜய் தரப்பில், அவர் வீடியோ மூலம் ஆஜர் ஆக அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *