மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான நிஹார் முகர்ஜியின் மகளான பிரிஷ்டி முகர்ஜி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 28. மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடியில், இன்று அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
அதே சமயம் இது குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்தபோது அவர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு அவர் தனது கண்வரிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் மேற்கு வங்கத்தை பெரிதும் உலுக்கிய ஆசிரியர் தேர்வு மோசடியில் பிரிஷ்டி முகர்ஜியும் வேலை பெற்றார். ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து பிரிஷ்டியின் வேலை பறிபோனது.