சினிமா விருதுகள், 2025-ல் கலந்துகொண்டார் நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி.
அவர் விழா மேடையில், `மீசைய முறுக்கு 2’ குறித்துப் பகிர்ந்துகொண்டார்… “ `மீசைய முறுக்கு 2’ போஸ்ட் புரொடக்ஷன் வொர்க்கில் இருக்கிறது.
ஆகஸ்ட், செப்டம்பரில் `மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியாகும்.
இந்தப் படம் மியூசிக்கல் படம். அதனால, இந்தத் திரைப்படத்தில் நிறைய பாடல்கள் இருக்கும்.

“மீசையை முறுக்கு 1′ எப்படி ஒரு மியூசிக்கலோ, அதே மாதிரி ‘மீசை முறுக்கு 2’-வும் ஒரு மியூசிக்கல் படம்தான்.
இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. படம் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் பாடல்கள் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கப்போறோம்.
`மீசைய முறுக்கு 1’-ல நெறைய சீன்ஸ்ல விவேக் சாரை அப்படி ரசிப்போம்… கொண்டாடுவோம்.