கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இடையில் முதல்வர் விஜய் ஒரு முறை வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார். அமைச்சர்கள் அருண்ராஜ், வெங்கட்ரமணன், சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் போன்றோரும் மருத்துவமனைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. எம்.எல்.ஏ வி.எஸ் பாபு சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முன் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூரில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வி.எஸ்.பாபு தோற்கடித்திருந்தார். இதனால் தமிழகம் முழுவதுமே கவனிக்கப்படக் கூடிய எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.