அவர் பேசுகையில், “ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன.
தொழில்நுட்பம் வளரும்போது அதில் நன்மைகளும் இருக்கும், தவறுகளும் இருக்கும். அதை நாம் எந்த அளவுக்கு நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அல்லது தவறாகத் துஷ்பிரயோகம் செய்கிறோம் என்பது அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது.
இப்படித் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணம் எவ்வளவு கீழ்த்தனமானது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஒருவேளை அவர்களின் வளர்ப்பும் அப்படி இருக்கலாம். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மட்டுமல்லாது எந்த ஒரு பெண்ணையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரிப்பவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை இப்படி ஏ.ஐ. மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள். அதில் உங்களுக்குச் சந்தோஷம் கிடைத்தால், அதன் பிறகு மற்ற பெண்களைப் பற்றி யோசியுங்கள்” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.