வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-16 – புகைப்படங்கள்
Posted on
Spread the love
புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்கு பின்பு 745 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.2,392 கிலோ எடை கொண்ட இந்த நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்பர்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.நிசார் செயற்கைக்கோள் மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை பெறமுடியும்.பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்களை அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பிறகு, விஞ்ஞானிகளிடம் உரையாற்றும் மிஷன் இயக்குனர் தாமஸ் குரியன்.
Spread the love சென்னை: காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாத சூழலுக்கான காரணம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாள் இன்று (அக்.2) […]
Spread the love தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் […]
Spread the love சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில், ராகுல்காந்தியின் தூதர் சந்தித்து பேசியிருந்தார். கூட்டணி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல்காந்தி தூதர் விஜய் சந்திப்பு […]