விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி:
விண்ணப்பங்களை தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் www.tamilvu.org இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, “இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை 600 025‘ முகவரிக்கு 30.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் தமிழ் ஆசிரியர்கள் ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். மாதம் ஒன்றுக்கு ரூ.1,25,000/- ஊதியமாக வழங்கப்படும்.
பயணச் சலுகை: பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவினம், விசா செலவினம், தங்குமிடச் செலவினங்கள் ஆகியன அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வழங்கும்.