Tamilnadu
oi-Velmurugan P
கள்ளக்குறிச்சி: வெளியானது எப்ஐஆர்.. கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும், போலீசார் நேரடியாகக் கைது செய்ய முடியுமா, முன்ஜாமீன் பெற முடியுமா விளக்கமாக பார்ப்போம்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பிஎன்எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் மட்டும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, BNS பிரிவு 75-ன் கீழ் பாலியல் துன்புறுத்தல், பிரிவு 78-ன் கீழ் பின்தொடர்தல் மற்றும் பிரிவு 79-ன் கீழ் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது
பெண் மாவட்ட ஆட்சியரின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து தொடர்பு கொள்வது, பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஏற்படுத்துவது, ஆபாசமான அல்லது அவமதிக்கும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்ற குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பெண்ணின் இணையப் பயன்பாட்டைக் கண்காணித்தல், மின்னஞ்சல் மற்றும் பிற மின்னணு தொடர்புகள் வாயிலாகத் தொடர்ந்து தொந்தரவு செய்தல் போன்ற செயல்கள் தொடர்பாகவும் பின்தொடர்தல் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கியமான சட்ட நுணுக்களை பார்ப்போம். இதில் BNS 75, 78, 79 ஆகிய மூன்று பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
என்ன தண்டனை
BNS 75(2) – பாலியல் துன்புறுத்தல் – உடல் ரீதியான பாலியல் அணுகல், பாலியல் சலுகை கோருதல், கட்டாயமாக ஆபாசப் படங்கள் காட்டுதல் – 3 ஆண்டுகள்
BNS 75(3) -பாலியல் நோக்கிலான கருத்துகள் – 1 ஆண்டு
BNS 78-பின்தொடர்தல் (Stalking) – முதல் குற்றம் – 3 ஆண்டுகள்
BNS 78-இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றம் -5 ஆண்டுகள்
BNS 79 -பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் வார்த்தைகள் அல்லது செயல்கள்-3 ஆண்டுகள்
இதில் BNS 75(2), 75(3) ஆகிய இரண்டும் ஒரே வழக்கில் பொருந்தாது புகாரில் கூறப்பட்ட செயல்கள் எந்த உட்பிரிவுக்குள் வருகின்றன என்பதே முக்கியம்.
சட்டப்படி கைது செய்ய முடியும்
பிஎன்எஸ் 75: கைது செய்யத்தக்க குற்றம், ஜாமீனில் வெளிவர உரிமையில்லாத குற்றம் ( அதாவது காவல் நிலைய ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்)
பிஎன்எஸ் 78: முதல் குற்றமாக இருந்தால் கைது செய்யத்தக்க குற்றம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம்
பிஎன்எஸ் 79: கைது செய்யத்தக்க குற்றம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம்
இதில் BNS 75 மட்டும் வழக்கில் இருந்தாலும் கைது செய்ய சட்டரீதியான அதிகாரம் போலீசுக்கு உள்ளது.
முன் ஜாமீன் பெற முடியுமா
BNS 75 போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்றாலும், BNSS பிரிவு 482-ன் கீழ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முடியும்.முன்ஜாமீன் என்பது நீதிமன்றத்தின் முடிவை பொறுத்தே அமையும்.
முன்னதாக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கின் விசாரணையை ஐ.ஜி. அந்தஸ்திலான உயர் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், விசாகா சட்டத்தின் கீழ் உள் புகார் குழு அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்றிது. மேலும், இறுதி அறிக்கையை டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், அடுத்த விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்திருக்கிறது.

