அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்த, அந்த நபர் காயமடைந்துள்ளார்.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட, சிகிச்சைக்குப் பலனில்லாமல் இறந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 21 வயதான நசீர் பெஸ்ட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் எதற்காக இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்பது தெரியவில்லை.
வெள்ளை மாளிகைக்கு அருகே, இவர் நடமாடக்கூடாது என்கிற நீதிமன்றங்களின் முந்தைய உத்தரவுகளை மீறி செக் பாயிண்டிற்கு வந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் தகவலின் படி, வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பல என்ட்ரி பாயிண்டுகளில் முன்பு சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.