வேதாந்த் மாதவன்: ஆசிய விளையாட்டு முதல் பதக்கங்கள் வரை முழு விவரம் | Vedaant Madhavan: Asian Games Debut, Medals & Career Records

Spread the love

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக வெள்ளித்திரையையே தங்களின் முதல் களமாகத் தேர்ந்தெடுக்கும் சூழலில், கடின உழைப்பும் உடல்தகுதியும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதித்துக் காட்டியும் வருகிறார் நடிகர் ஆர்.மாதவனின் மகன் வேதாந்த்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நீச்சல் அணியில் தனது முதல் போட்டியைத் தொடங்கி சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஆண்களுக்கான 4×200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே தகுதிச் சுற்றில் வேதாந்த் மாதவன், சாஜன் பிரகாஷ், தக்ஷன் சசிகுமார் மற்றும் அனீஷ் சுனில் ஆகிய நால்வர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது.

13 அணிகள் பங்கேற்ற இந்தச் சுற்றில், இந்திய அணி பந்தய தூரத்தை 7 நிமிடம் 24.32 விநாடிகளில் கடந்து 9-வது இடத்தைப் பிடித்தது.

வேதாந்த், மாதவன்

வேதாந்த், மாதவன்

முதல் 8 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில், 8-வது இடத்தைப் பிடித்த கத்தார் அணியை விட வெறும் 0.22 விநாடிகள் மட்டுமே பின்தங்கி இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.

போட்டிக்குப் பின் வேதாந்த், “0.2 விநாடிகளில் இறுதிப்போட்டி வாய்ப்பு நழுவியது; எனது அடுத்த 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தனிநபர் போட்டியில் சிறப்பாகச் செயல்படுவேன்” எனப் பதிவிட்டார். அவரது விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக, தந்தை மாதவன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கும் எமோஜியுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டு தனது பாசிட்டிவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *