“வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த இந்திய நிறுவனங்கள் என்ன செய்தன?” – பிரதமர் மோடி கேள்வி| “What have Indian companies done to boost employment and wages?” – Prime Minister Modi asks

Spread the love

டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “இந்திய வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகக் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்தல், வருமான வரிச் சலுகைகள், விதிமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தித் தொழில்துறை என்ன சாதித்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. நாட்டின் வளர்ச்சியை அரசு மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளனவா, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளனவா? என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. மேலும், வாய்ப்புகளை அரசே அடையாளம் காட்டும் என்று காத்திருக்காமல், இந்தியாவின் விரிவடைந்து வரும் வர்த்தக ஒப்பந்தங்களைப் (FTA) பயன்படுத்திக்கொள்ளத் தொழில்துறையினர் உறுதியான வியூகங்களை வகுக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு நுகர்வோர் சந்தை என்பது நிறுவனங்களின் சொகுசு மண்டலமாக மாறிவிடக் கூடாது. வெளிநாட்டுச் சந்தைகளுக்கு வழங்கப்படும் அதே தரத்திலான பொருட்கள் இந்திய நுகர்வோருக்கும் கிடைக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *