வைகோவிற்கு சர்ப்ரைஸ் ட்விஸ்ட்.. சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன் மதிமுகவில் தொடருகிறாரா? | Is Sirkazhi MLA Senthilselvan continuing in the MDMK? A surprise twist for Vaiko

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

மயிலாடுதுறை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார். தவெக உடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் மதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தவர்கள் ஆவர். அவர்களை ராஜினாமா செய்யுமாறு வைகோ கூறினார். ஆனால் இருவருமே ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். அவர்கள் திமுகவில் தொடர்பாகவே கூறப்பட்டது. இந்நிலையில் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில்செல்வன் மதிமுகவில் தொடர்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ம.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியும் எழுப்பி உள்ளார்கள்.

விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 இடங்களில் வென்றதால், திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ், ஐயுஎம்ல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே வரிசையாக வெளியேறின. பிரேமலதா தலைமையிலான தேமுதிக, கமல்ஹாசனின் மநீம, ஜவாஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே கூட்டணியில் அப்படியே நீடிக்கின்றன. மற்ற கட்சிகள் எல்லாம் வரிசையாக வெளியேறி தவெகவில் இணைந்துவிட்டன. அதாவது திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிவிட்டன..

MDMK Sirkazhi mla vaiko

அந்த வரிசையில் மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.. அண்மையில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் வைகோ முடிவினை அறிவித்தார் . இதற்காக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ம.தி.மு.க.வின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் செந்தில்செல்வன் (சீர்காழி), ராஜேந்திரன் (கடையநல்லூர்) ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் இருவரும் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று செந்தில்செல்வன் கூறினார். மேலும் மதிமுகவில் இருந்து தற்போது விலகிவிட்டதாகவும் இதனால் நாளை நடைபெறும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க செந்தில்செல்வன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்து இறங்கினார். நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பியபோது அவரிடம் நிருபர்கள், ‘நீங்கள் ம.தி.மு.க.வில் தொடருகிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு செந்தில்செல்வன் எம்.எல்.ஏ. ‘நான் மக்கள் பணி செய்து வருகிறேன், மக்களுக்கு தொடர்ந்து கடமை ஆற்றுவேன்’ என்று பதில் அளித்துவிட்டு சிரித்தபடியே காரில் புறப்பட்டுச் சென்றார். ம.தி.மு.க.வில் தொடருகிறீர்களா? என்ற கேள்விக்கு எம்.எல்.ஏ. நேரடியாக பதில் அளிக்காதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *