Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஐபிஎல் தொடரில் அசாத்திய ஆட்டத்தை ஆடிய 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் இடம்பிடித்து புதிய வரலாறு படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை என்றாலும், ஜிம்பாப்வே டி20 தொடரில் ஃபார்முக்கு வந்தார். தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு அடுத்த டெஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது.
துலீப் டிராபியில் நாளை வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க உள்ளார். ஒயிட் பாலில் வைபவ் சூர்யவன்ஷி சாதித்திருந்தாலும், ரெட் பால் கிரிக்கெட்டிலும் வைபவ் சூர்யவன்ஷி கவனம் செலுத்த வேண்டும் என்ற அட்வைஸ் அதிகரித்துள்ளன. இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் அவருக்கு சில அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதில் ராகுல் டிராவிட் பேசுகையில், எப்போதும் பேலன்ஸை கண்டறிவது முக்கியம். வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒயிட் பால் கிரிக்கெட் அனுபவம் கிடைத்து வருவது மிகச்சிறந்த விஷயம். தற்போது ரெட் பால் கிரிக்கெட்டுக்காக உள்நாட்டு போட்டிகளில் ஆடுவது, அவருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இங்குள்ள அனைவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வீரர்கள் அவசியம். அவர் நிச்சயம் வைபவ் சூர்யவன்ஷி அனைத்து வடிவங்களிலும் விளையாட கவனம் செலுத்துவார். அவரை போலவே அனைவரும் முயற்சிக்க வேண்டும். ஒரு நல்ல விஷயமென்றால், அவருக்கு ரெட் பால் அனுபவம் கிடைக்கிறது.
அவருக்கு அதிகமாக ரெட் பால் கிரிக்கெட் விளையாட வாய்ப்புகளும் அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் வைபவ் சூர்யவன்ஷி ரெட் பால் கிரிக்கெட்டை விடவும் ஒயிட் பால் கிரிக்கெட் விளையாடவே வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு இப்போது 15 வயது மட்டுமே ஆகிறது. அவருக்கான நேரம் கொடுத்து பொறுமையாக நாம் காத்திருக்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷிக்கு உடனடியாக வெற்றிகள் கிடைக்கலாம்.
ஆனால் நிச்சயமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். அதனை பொறுமையாக எடுத்து, அவர் கம்பேக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாளை துலீப் டிராபி தொடர் நடக்க உள்ளதால், ரசிகர்களின் கண்கள் இளம் வீரர்கள் பக்கம் திரும்பி இருக்கிறது.