நுரையீரல் புற்றுநோய்க்கென முக்கிய அறிகுறிகள் சில உள்ளன. அவற்றைச் சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. அந்த வகையில் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடரும் இருமல் (மருந்து சாப்பிட்டும் சரியாகாத நிலை), நடக்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல், முதுகு அல்லது தோள்பட்டை வலி, திடீர் எடைக் குறைவு மற்றும் பசியின்மை, குரல் கரகரப்பு, மீண்டும் மீண்டும் சளி பிடிப்பது அல்லது நிமோனியா வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust fan) பொருத்துவதும் போதுமான ஜன்னல் வசதி இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.
சமைத்த பிறகு 10 நிமிடங்களுக்கு மேல் புகை உள்ளே தங்கக் கூடாது. யாரையும் புகை பிடிக்க அனுமதிக்கக் கூடாது. சாம்பிராணி மற்றும் ஊதுவத்தி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணகுமார்:
சென்னை, காமாட்சி மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்… இத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.