ஸ்டாலின் மிசா கைது: “இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை” – அமைச்சர் நிர்மல் குமார் | Stalin’s MISA arrest: “No clear evidence has been provided so far” – Minister Nirmal Kumar.

Spread the love

இரா. செழியன் அவர்கள் மொழிபெயர்த்த சர்க்காரியா கமிஷன் புத்தகத்தில் கூட ஸ்டாலின் அவர்களின் பெயர் இடம்பெறவில்லை. இவ்வாறு 30, 40 ஆண்டுகளாக இருக்கும் ஒரு சர்ச்சைக்கு இதுவரை அவர்களால் தெளிவான சான்றை அளிக்க முடியவில்லை. எனவே, அவரை மீண்டும் மீண்டும் மிகப்பெரிய தியாகியாகக் சித்தரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதை மக்கள் நம்பவும் மாட்டார்கள்.

இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் பரந்தாமன் என்பவர், எக்மோர் தொகுதியில் இருந்த காலத்தில் தொகுதிப் பக்கமே செல்லாதவர். உள்ளூரிலேயே செல்லுபடியாகாத ஒருவரை மதுராந்தகத்தில் கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.

தி.மு.க பரந்தாமன்

தி.மு.க பரந்தாமன்

உள்ளூரில் போட்டியிட ஆள் இல்லாததால் தான் வெளியூர் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். நாளை தேர்தலில் டெபாசிட் இழக்க நேரிட்டால், அதற்கு ‘வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதே காரணம்’ என்று சொல்வதற்குக் களம் அமைத்துக் கொள்கிறார்கள்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே ‘திருமங்கலம் ஃபார்முலா’ பாணியில் நூறு கோடி, இருநூறு கோடி என மக்களை ஏமாற்றக் கொண்டு வந்தாலும், மக்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதில் தெளிவான முடிவை எடுப்பார்கள். மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்தித்தாலும், மக்கள் இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். 2026 தேர்தலிலும் சரி, இந்த இடைத்தேர்தலிலும் சரி, இரு கட்சிகளுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *