ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன்; 3-ம் இடம் பிடித்த இந்தியா | Germany wins Men’s Junior Hockey World Cup; India finishes 3rd

Spread the love

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை – ஜெர்மனி vs ஸ்பெயின்

இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *