ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்: ஈரான் அறிவிப்பு; ட்ரம்பின் எதிர்வினை என்ன?|Hormuz Drama: Iran Shuts Strait Again

Spread the love

கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு, நேற்று தான் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக அறிவித்தது ஈரான்.

ஆனால், இன்று மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது ஈரான். இதை ஈரானே சொல்லியிருக்கிறது.

இந்த மூடலுக்கு ஈரான் சொல்லும் காரணம், “அமெரிக்கா ஈரானின் துறைமுகத்தை முற்றுகையிட்டிருப்பதால், ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுகிறது.

அமெரிக்காவின் இந்தச் செயல் கடற்கொள்ளை மற்றும் கடல்வழித் திருட்டுச் செயல்களைப் போல இருக்கிறது. அதனால், இனி ஹார்முஸ் முழுமையாக ஈரானின் ஆயுதப் படைகளுக்குக் கீழ் இருக்கும்.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி

ஈரானின் கப்பல்கள் வந்து போவதில் எந்தப் பிரச்னையும் மீண்டும் ஏற்படாத வரை, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் ஈரானின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்” என்று கூறுகிறது.

இதற்கு எதிர்வினையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது, “ஈரானுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அவர்களுக்கு மீண்டும் ஜலசந்தியை மூட வேண்டும். இதை அவர்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்.

இதை வைத்து அவர்கள் நம்மை பிளாக்மெயில் செய்யக் கூடாது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *