ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி அதிகம் பேசப்பட்ட விஷயம் “ஹார்முஸ் நீர்ச்சந்தி’.
போர் தொடங்கியதுமே ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது. அது உலகின் எண்ணெய் போக்குவரத்திற்குப் பேரிடியாக இருந்தது.
எந்தக் கப்பல்களும் அந்த நீர்ச்சந்தி வழியாகச் சென்று வரமுடியவில்லை. அவ்வப்போது சில கப்பல்கள் மட்டும் அந்த வழியே வந்து போய்கொண்டிருந்தாலும், உலக நாடுகளின் எண்ணெய் வர்த்தகத் தேவைகளுக்கு அந்த எண்ணெய் பத்தாது.

“கடந்த மாதம், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் டாங்கர்கள் மற்றும் பிற வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பெருமைமிகு அமெரிக்க ராணுவத்திற்கு நான் உத்தரவிட்டிருந்தேன்.
அந்த முயற்சியின் பலனாக, இன்று 100 மில்லியனுக்கும் அதிகமான பேரல் எண்ணெய் அந்த நீர்ச்சந்தியைக் கடந்து, பாதுகாப்பாக உலகச் சந்தையைச் சென்றடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.