ஹார்முஸ் நீர்ச்சந்தி: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்கு ஈரான் புதிய திட்டம்|No Compensation? Iran May Block US Ships at Hormuz

Spread the love

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் விடுவதாக இல்லை… அமெரிக்காவும் விடுவதாக இல்லை.

அமெரிக்காவும், இஸ்ரேலும் போரைத் தொடங்கிய உடன் ஈரான் செய்தது – ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கம்.

இன்னும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மீதான பிடிப்பை ஈரான் விடுவதாக இல்லை.

அமெரிக்காவும் ஈரானுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஒருபுறம் கட்டுப்படுத்தி வருகிறது.

அதன் மூலம், அந்த நீர்ச்சந்தியில் ஈரான் கப்பல்கள் வந்து செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது அமெரிக்கா.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி

இந்த நேரத்தில் ஈரான் ஒரு வரைவுத் திட்டத்தைத் தயார் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வரைவுத் திட்டத்தின் படி, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கப்பல்கள் வந்து செல்வதற்குத் தடை விதிப்பதற்கு ஈரான் பிளான் செய்துள்ளது.

இந்த இரு நாடுகளும் போர் மூலம் தங்களுக்கு ஏற்படுத்திய நஷ்டத்திற்கு இழப்பீடு தந்துவிட்டால் மீண்டும் அந்த இரு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அனுமதி வழங்கப்படுமாம்.

முன்பிருந்தே ஈரான் நஷ்ட ஈடு கேட்டு வருகிறது. ஆனால், அதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் செவி சாய்ப்பதாக இல்லை. அதனால்கூட, ஈரான் இந்த வரைவுத் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *