ஈரான் போரின் மையமாக மீண்டும் “ஹார்முஸ் நீர்ச்சந்தி’ மாறியுள்ளது.
ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா… முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக்கா, ஈரானும் வெவ்வேறு விதமாக கூறிக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறித் தாக்குதல் நடத்திகொண்டிருக்கின்றன.
இதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம், ‘இது தற்காப்புத் தாக்குதல்’ என்பதாகும். ஈரானோ, ‘அமெரிக்கா தாக்குகிறது… பதிலுக்கு நாங்கள் தாக்குகிறோம்’ என்கிறார்கள்.

“ஹார்முஸ் நீர்ச்சந்தி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
அமெரிக்க எதிரிகளால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
பெர்சிய வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் நங்கூரமிட்டுள்ள எந்தவொரு கப்பலும் அங்கிருந்து நகரக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.