ஹீரோ கனவுடன் வந்த பாரதிராஜா; இயக்குநர் இமயமாக உயர்ந்த பயணம்|Bharathiraja Revealed Why He Shifted From Acting to Directio

Spread the love

“தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்” – சென்னைக்கு “ஹீரோ’ ஆசையுடன் தான் வந்திருக்கிறார், பாரதிராஜா.

ஆனால், அவருக்கு கிடைத்த அங்கீகாரம், ‘இயக்குநர்’ என்பதாகும்.

மக்கள் மனதில் ‘இயக்குநர் இமயம்’ ஆக நிறைந்திருக்கும் பாரதிராஜா, “ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செஞ்சுக்கிட்டே வாய்ப்பு தேடிட்டிருந்தேன்.

பாரதிராஜா

பாரதிராஜா

அப்போ, பெட்ரோல் போட வரும் காருக்குள்ள ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரினு, ஃபுல் மேக்அப்ல மெழுகு பொம்மையாட்டம் உட்காந்திருப்பாங்க” என்று விகடனின் ‘தடம்’ இதழுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

“ஒரு கட்டத்துக்கு மேல, சினிமா இந்த முகத்தை ஹீரோவா ஒத்துக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சது.

சரி, எப்படியாவது சினிமாவுக்குள்ள போகணும்னு உதவி இயக்குநரா நுழைஞ்சேன். அது ஒருவிதமான நிர்பந்தம்.

இப்போ நினைச்சுப் பார்க்கும்போது, ஆச்சர்யமா இருக்கு. Really I am Proud be a Director!” என்று 2008-ல் தன் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் ‘பாசத்திற்குரிய பாரதிராஜா’.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *