$1.2 பில்லியன் கிரிப்டோ வருமானம்: ட்ரம்ப் அளித்த விளக்கம் என்ன?|Trump on $1.2 Billion Crypto Fortune: ‘I Don’t Manage My Money’

Spread the love

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தின் கிரிப்டோகரன்சி தொழில்கள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார்.

“என்னுடைய தனிப்பட்ட நிதி விவகாரங்களில் நான் நேரடியாகத் தலையிடுவதில்லை. என் பணத்தை நிர்வகிப்பதற்கென்றே சில பிரத்யேக நிதி நிறுவனங்கள் உள்ளன.

கிரிப்டோ கரன்சி

கிரிப்டோ கரன்சி
சித்தரிப்புப் படம்

நான் அதிபராவதற்கு முன்பே பெருமளவில் பணம் ஈட்டியவன். அவர்கள் என் பணத்தை வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நான் அவர்களுடன் பேசுவதே இல்லை. ஒருபோதும் தொடர்புகொள்வது கிடையாது.

என்னிடம் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். “மூடப்பட்ட கணக்குகள்’ (Blind Trust) என்று சொல்வார்களே, அதுபோன்ற ஒரு அமைப்பில் நாம் பணத்தைச் செலுத்திவிட்டால் அதோடு சரி, அதன்பின் நாம் அவர்களுடன் விவாதிக்க முடியாது.

அவை பெரிய நிறுவனங்கள், அவர்கள்தான் அதை முழுமையாக நடத்துகிறார்கள். எவ்வாறாயினும், வணிகத் துறையில் எனக்கு மிகச்சிறந்ததொரு தொழில் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை நான் மறுக்க முடியாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *