10 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை முடிவு: விவாகரத்தை உறுதி செய்த நடிகர் ஸ்ரீநாத் பாசி! | Sreenath Bhasi Confirms Divorce After 10 Years of Marriage

Spread the love

இது குறித்து ஸ்ரீநாத் பாசி பேசுகையில், “நாங்கள் 2024-லேயே பிரிந்துவிட்டோம். விவாகரத்துக்குப் பிறகு நான் மீண்டும் என்னுடைய பெற்றோருடனே தங்கி வருகிறேன்.

இதுவரை இந்த விஷயம் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இப்போது இந்தப் பேட்டியின் மூலமாக அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

வீட்டில் சில நேரங்களில் அப்பாவிடம் சண்டை போடும்போது, ‘இனிமேல் நாம் ஒன்றாக இருக்க முடியாது, இதெல்லாம் சரிவராது’ என்று நினைப்பேன்.

ஆனால், சண்டை போட்டுவிட்டு அறைக்குச் செல்லும்போதுதான், பெற்றோர் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என்பதை உணர்வேன். அந்த உணர்வு மிகவும் கடினமானது. இப்போது வாழ்க்கையின் இந்த நிலையை இயல்பாக அனுபவிக்க முயற்சித்து வருகிறேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

ஸ்ரீநாத் பாசி தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணியாற்றிய காலத்தில், ரீது ஜக்காரியாவை முதன்முதலில் சந்தித்திருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *