10 ஆண்டு லின் இன் உறவு.. ஒரு வழியாக திருமணம் வாழ்க்கைக்குள் வந்த ரொனால்டோ! இன்ஸ்டாவில் தெறி சம்பவம் | Cristiano Ronaldo: Cristiano Ronaldo and Georgina Rodriguez Tie the Knot After 10 Years of Live-In Relationship

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

மும்பை: 10 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் போர்ச்சுகல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியது.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்து கொண்டுள்ளார். போச்சுகல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமணம் கோலாகலமாக நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பின் மோதிரத்துடன் கூடிய கைகளின் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டுள்ளனர்.

Cristiano Ronaldo Lionel Messi Football

41 வயதாகும் ரொனால்டோ மற்றும் 32 வயதாகும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் திருமணம் செய்யப் போவதாக நீண்ட ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. தற்போது உலகக்கோப்பை தொடர் தோல்விக்கு பின் ரொனால்டோ திருமணம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10 ஆண்டுகளாக லின் இன் உறவில் இருந்து வருகிறார்.

2016ஆம் ஆண்டு ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடிய போது ஒரு Gucci ஸ்டோரில் வைத்துதான் ரொனால்டோ ஜார்ஜினா ரோட்ரிக்ஸை சந்தித்தார். இதன்பின் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு ஃபிஃபா விருது விழாவில் தான் ஒரே நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றனர். அதன்பின்னர் இருவரும் காதலித்து வருவதையும் உறுதி செய்தனர்.

ஆனால் ரொனால்டோ – ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதியே முதலில் இந்த காதல் உறவு இவ்வளவு காலம் உறுதியாக இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளவில்லை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆணவப்படத்திலும் கூட இதனை இருவரும் பேசி இருக்கின்றனர். ஆனால் 2022ஆம் ஆண்டுக்கு பின் இருவருமே தங்களின் உறவில் தீவிரமாக இருந்தனர்.

ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கு முன்பாக ரொனால்டோ 4 பேருடன் காதல உறவில் இருந்திருக்கிறார். அதில் ஐரினா ஷேக் உடனான உறவு மட்டுமே 5 ஆண்டுகள் வரை நீடித்தது. அதன்பின் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடனான உறவு தான் திருமணம் வரை வந்துள்ளது. ரொனால்டோ – ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கு 2 குழந்தைகள் பிறந்துவிட்ட போதும் கூட இவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதனால் ரொனால்டோவின் வாழ்க்கை முறையெ ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை உருவாக்கி இருந்தது. இறுதியாக 10 ஆண்டுகால காதல் உறவை ரொனால்டோ திருமணம் நோக்கி கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் பகிர்ந்த மோதிர புகைப்படம் வெறும் 30 நிமிடங்களில் இன்ஸ்டாகிராமில் மட்டும் 3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *