`1000 ஊசிகள் போட்டுக்கொண்டேன்..!’ – செயற்கை முறையில் குழந்தை பெற்ற வேதனையைப் பகிர்ந்த பாலிவுட் நடிகை

Spread the love

பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு 2015ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிறந்தது.

இக்குழந்தை பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டபோது தேஜஸ்வினி பகிர்ந்து கொண்டார். தேஜஸ்வினி கோலாபுரே கூறுகையில், “நான் ஐந்து முறை IVF சிகிச்சை செய்துகொண்டேன். அதைப்பற்றி நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுவேன். அதைச் செய்யும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். IVF என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறை. முதல், இரண்டாவது கடினமாக இருக்கும். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது முறை சரியாகிவிடும்.

மருத்துவமனைக்குச் சென்று அந்த ஊசிகளைப் போட்டுக்கொள்வதற்கே நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும்.

இது மிகவும் வேதனையான ஒரு செயல்முறை. நான் என் வாழ்க்கையின் பிற்பகுதியில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன். என் அறிவுரை என்னவென்றால், தயவுசெய்து 35 வயதுக்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள். நான் தாமதமாக குழந்தை பெற்றுக்கொண்டது நிச்சயமாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னைப் பாதித்தது. நான் அப்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மனதளவில் நான் மிகவும் வலிமையானவள்.

உடல்ரீதியாக, 1,000-க்கும் அதிகமான ஊசிகள் எடுத்துக்கொண்டேன். இதனால் உடம்பு மாறிவிட்டது. உங்கள் கர்ப்பம் பாசிட்டிவாக இருந்தால், அவர்கள் நிறுத்துகிறார்கள். நான் ஐ.வி.எஃப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள 5 முறை முயன்றேன். இதில் இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. 5வது முறையாகத்தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது”‘ என்றார்.

நடிகர் சக்தி கபூர் மனைவி ஷிவாங்கி கோலாபுரே மற்றும் பழம்பெரும் நடிகை நடிகை பத்மினி கோலாபுரே ஆகியோரின் தங்கையான தேஜஸ்வினி, பாலிவுட் நட்சத்திரங்கள் ஷ்ரத்தா கபூர் மற்றும் சித்தாந்த் கபூர் ஆகியோரின் அத்தை ஆவார். 2003ம் ஆண்டு பாலிவுட்டில் தேஜஸ்வினி அறிமுகமானார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *