12 ராசிகாரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கு? முழு ராசிபலன் இதோ! – Kumudam

Spread the love

மேஷம்

எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய கால கட்டம். குடும்பத்தில் நிம்மதி நிறையும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடிவரும். பெற்றோருடன் தர்க்கம் தவிருங்கள். உங்கள் வாக்குக்கு செல் வாக்கு உயரும். சீரான பண வரவும் உண்டு. பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு எதிர்பாராத பதவி, ஊதிய உயர்வுகள் வரலாம். உணவில் வாய்க்கட்டுப்பாடு அவசியம். தலைவலி, தூக்க மின்மை உபாதை வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.

ரிஷபம்

திறமைக்கு ஏற்ற பெருமைகள் வரக்கூடிய காலகட்டம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் தேவை. உறவுகளின் குறைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். செலவை முறைப்படுத்துங்கள். அலுவலகத்தில் உயர்வுகள் கைகூடி வரும். உடனிருப்போருடன் பேசும்போது வாக்கில் நிதானம் தேவை. வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். அடிவயிறு, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.

மிதுனம்

நாவடக்கம் இருந்தால், நல்லவை நடக்கும் காலகட்டம். குடும்பத்தில் சுமுகச் சூழல் நிலவும். உறவுகளிடம் குதர்க்கம் வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுங்கள். முதியவர்கள் வழுக்கலான இடத்தில் கவனமாக இருங்கள். பணியிடத்தில் வீண் ரோஷம் தவிருங்கள். யாரிடமும் கர்வம் வேண்டாம். சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவுப் பயணம் தவிர்ப்பது நல்லது. நரம்பு, எலும்பு உபாதைகள் வரலாம். ரங்கநாதர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.

கடகம்

நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். விடுபட்டிருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய கடன்களைத் தவிருங்கள். சிலருக்கு பாரம்பரிய சொத்து ஆதாயம் தரும். விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாட்டைச் செய்துமுடிக்க நேரம் அமையும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு பதவி, பாராட்டுகளும் கிட்டும். பயணத்தில் வேகம் வேண்டாம். தூக்கமின்மை, அல்சர் உபாதை வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, இனிமை சேர்க்கும்.

சிம்மம்

நிதானமாகச் செயல்படவேண்டிய காலகட்டம். குடும்பத்தில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தைகளால் அதனை உடைக்க வேண்டாம். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். தரல், பெறலில் நிதானம் தேவை. அலுவலகத்தில் அமைதியாக இருப்பதே நல்லது. இருப்பதை விடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவது நல்லது. புதிய முயற்சிகள் பலிதமாகும். கண், பல் உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு, சிறப்பு சேர்க்கும்.

கன்னி

உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கக் கூடிய காலகட்டம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உங்கள் மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் ஏற்படும். சூடான பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். அலுவலகத்தில் திட்டமிட்டுச் செயல்படுங்கள். பொறுப்புகளில் வீண் டென்ஷன் தவிருங்கள். வீடு, மனையில் புதிய முதலீடு வேண்டாம். வெளியூர், வெளிநாடு செல்ல யோகம் உண்டு. அலர்ஜி, நரம்பு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு, பெருமை சேர்க்கும்.

துலாம்

முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம். குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். பலகாலக் கனவுகள் பலிதமாகத் தொடங்கும். விடுபட்டிருந்த தெய்வ வழிபாடுகள் கைகூடி வரும். வாரிசுகளால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பால் நட்பில் எல்லை வகுத்திடுங்கள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். பயணத்தில் உடைமைகள் பத்திரம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். தன்வந்திரி வழிபாடு, தழைக்கச் செய்யும்.

விருச்சிகம்

திறமை பளிச்சிடும் காலகட்டம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவத்தொடங்கும். உறவுகள் வருகையால் ஆதாயம் ஏற்படும். வாரிசுகள் மனம்போல சுபகாரியங்கள் கைகூடும். பெற்றோர் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பெருமைகள் கைகூடி வரும். சிலருக்கு உயர்வுடன் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. வாகனத்தில் நிதானம் முக்கியம். சுளுக்கு, அஜீரண உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.

தனுசு

சிந்தித்து செயல்பட்டால், சிறப்புகள் சேரக் கூடிய காலகட்டம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். தேவையற்ற தர்க்கம் யாருடனும் வேண்டாம். ஆடம்பரம் தவிருங்கள். கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள். வயதில் முதியவர்கள் கூரிய பொருள்களை கவனமாகக் கையாளுங்கள். பணியிடத்தில் வீண் ரோஷம் வேண்டாம். உடனிருக்கும் யாருக்கும் வாக்குறுதிகள் தர வேண்டாம். பயணப் பாதையில் ஓய்வு அவசியம். அடிவயிறு, கழுத்து உபாதைகள் வரலாம். அங்காளம்மன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.

மகரம்

உன்னதமான சூழல் உருவாகும் காலகட்டம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். உங்கள் வாக்கின் மதிப்பு அதிகரிக்கும். உறவுகளிடையே அன்னியோன்னியம் உருவாகும். வாரிசுகள் வாழ்வில் பெருமை சேரும். கடன்கள் பைசலாகும். வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். பதவி, பாராட்டுக்கு வாய்ப்பு உண்டு. பயணத்தில் நிதானம் முக்கியம். தொடைப்பகுதி, இடுப்பு உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் தரும்.

கும்பம்

மனதில் நிம்மதி நிறையக்கூடிய கால கட்டம். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியரிடையே அன்னி யோன்னியம் ஏற்படும். வாரிசுகள் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். எதிர் பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பணியிடத்தில் திறமை பேசப்படும். சிலருக்குப் புதிய வாய்ப்புகள் கைகூடி மகிழ்ச்சி தரும்: சகவாச தோஷத்தை விலக்குவது முக்கியம். பித்த அதிகரிப்பு, தலைவலி உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு, களிப்பு தரும்.

மீனம்

அமைதியாகச் செயல்படவேண்டிய கால கட்டம், குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தரல், பெறலில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருள்களை பத்திரமாக வையுங்கள். பிறமொழி மனிதர் களிடம் எச்சரிக்கையாக இருங்கள். புதிய முயற்சிகளில் அகலக் கால் வைக்க வேண்டாம். அலுவலகத்தில் அடக்கமே நல்லது. பொறுப்புகளை திட்ட மிட்டுச் செய்யுங்கள். வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். முதுகு, அடிவயிறு உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நலம் சேர்க்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *