டிராவிஸ் ஹெட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 27 ரன்களுடனும், மார்னஸ் லபுஷேன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு, 1-0 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.
அதன் பின், கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தற்போது, ஆஸ்திரேலிய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.