“14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது” – தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன் | Considering Adoption: Shruti Haasan Faces Challenges in Conceiving Due to PCOS

Spread the love

நடிகை சோஹா அலிகானின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தனது கருத்தரிப்பு பிரச்னை குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

அதில், “PCOS, கருத்தரிப்பைச் சவாலானதாக மாற்றும் என்று முதலில் கூறப்பட்டபோது எனக்கு 14 வயதாக இருந்தது.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

பல ஆண்டுகளாக, தாயாக மாறுவது தனக்கு சாத்தியமில்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. எனது மகப்பேறு மருத்துவர் டாக்டர் துருப்தி தெதியா, நிலைமையை வித்தியாசமாகப் பார்க்க உதவினார். பிரசவம், கருத்தரித்தல் போன்றவற்றை மறந்துவிடுவது நல்லது என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

எனக்கு பதினான்கு வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது. டாக்டர் துருப்தி அதைக் கூறி என் மனதை மாற்றினார். எனவே குழந்தை தத்தெடுப்பு குறித்தும் நான் பரிசீலித்ததுண்டு. நான் தாயாக விரும்பும்போது, உயிரியல் ரீதியாக குழந்தை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வேன். நான் குழந்தையைத் தத்தெடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூட சொன்னேன்.

நான் ஒரு அம்மாவாக இருக்க விரும்புகிறேன். ஆனால், ஏதோ ஒரு உயிரியல் வழியில், நான் நிச்சயமாக அதை முயற்சி செய்ய விரும்புகிறேன்”‘ என்று தெரிவித்தார்.

PCOS என்பது பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய். இதனால் கருத்தரிப்பில் சிக்கல், எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *