2 kg of gold, ₹50 lakh in deposits, and houses: Telangana engineer amassed assets worth ₹150 crore.-2 கிலோதங்கம், ரூ.50 லட்சம் வைப்பு தொகை, வீடுகள்: ரூ.150 கோடிக்கு சொத்து குவித்த தெலங்கானா எஞ்சினியர்

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் எஞ்சினியராக இருப்பவர் முத்யம் வெங்கட ரமணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமிதாரர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஏழு இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், தலா ரூ. 1.23 கோடி மதிப்பு கொண்ட நான்கு குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், 1.82 கோடி மதிப்புள்ள “G+3′ வணிகக் கட்டிடம் மற்றும் 250 சதுர யார்டு பரப்பளவில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள ‘G+5’ வணிகக் கட்டிடம் ஆகிய சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அசையாச் சொத்துகள் தவிர, ரூ. 52.02 லட்சம் மதிப்பிலான வங்கி இருப்புகள், சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 2.094 கிலோ தங்க ஆபரணங்கள், சுமார் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள மூன்று வாகனங்கள், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள், மற்றும் சுமார் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 20 மது பாட்டில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நான்கு கட்டுமான நிறுவனங்கள் மூலம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் கணிசமான முதலீடுகளைச் செய்திருந்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அஞ்சநேய நகர் மற்றும் மூசாபேட் ஆகிய பகுதிகளில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், தற்போது கட்டுமானத்தில் உள்ள 10 குடியிருப்பு வளாகங்களை அவர் கட்டி வருவதும் தெரிய வந்தது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை விட கணிசமாக அதிகமாக இருப்பதாக இருக்கும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் படி சொத்துகளின் மொத்த சந்தை மதிப்பு தோராயமாக ரூ.100-150 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு இது போன்று லஞ்சம் வாங்கியதாக ரமணா கைது செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *