குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா முதல்வர்?
“உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லி லஞ்சம் கொடுக்காதீர்கள்” என மக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டு வருவதன் விளைவாக, இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே 20 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் “சர்வீஸ் சார்ஜ்’ கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
ஊழலை ஒழிப்போம், நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம், அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனத் தேர்தல் நேரத்தில் வீராவேசமாக பஞ்ச் டயலாக்குகளைப் பேசிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் வரை பலர் மீது தொடர்ந்து எழுந்துவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வாரா? அல்லது எப்போதும் போல, மக்கள் எக்கேடு கெட்டாலும் தனக்கென்ன என்ற மனப்பான்மையுடன் மௌனமாகக் கடந்து செல்வாரா?
சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே, தவெக ஆட்சி அமைந்தது முதல் போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அரசு பதவிகளைப் பெற 5 கோடி ரூபாய் வரை லஞ்சப் பேரம் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொடங்கி தவெக நிர்வாகிகள் மீது எழுந்த புகார்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடந்து சென்றதைப் போல, சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரையும் அலட்சியப்படுத்திவிடாமல், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.